Publish Date: Fri, 29 Mar 2024 (21:06 IST)
Updated Date: Fri, 29 Mar 2024 (21:07 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் 10 ஆவது போட்டி இன்று சின்னச்சாமி ஸ்டேடியம் பெங்களுருவில் நடக்கிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களுரு அணியில் ஒருபுறம் கோலி நிலைத்து நின்று விளையாடினாலும் மற்றொரு புறம் வீரர்கள் விக்கெட்களை இழந்ததால் அவரால் அதிரடியாக விளையாட முடியாமல் நிதானமான ஆட்டத்தையே விளையாட வேண்டிய சூழல் உருவானது. தினேஷ் கார்த்திக் கடைசி நேர அதிரடியாக 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்.
கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்களை இழந்து 182 ரன்களை சேர்த்தது.