சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது அவரின் உண்மையான வயது 15 எனவும், வயதைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியுள்ளதாகவும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஆனால் வைபவ்வின் தந்தை அதை மறுத்துள்ளார். தன்னுடைய மகனின் வயதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்துள்ள வைபவ் “நான் இப்போது என்னுடைய கேரியரில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். என்னை சுற்றி நடக்கும் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. என்னுடைய கிரிக்கெட் ஆதர்ஸம் பிரையன் லாராதான்” எனக் கூறியுள்ளார்.