Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிரடி சதத்துக்கு உடனடி பலன்… இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சூர்யவன்ஷி?

Advertiesment
வைபவ் சூர்யவன்ஷி

vinoth

, புதன், 30 ஏப்ரல் 2025 (13:27 IST)
நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். பவுலர்களைக் கொஞ்சம் கூட மதிக்காமல் அனைத்துப் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பும் பேராசையோடு நேற்று வைபவ்வின் இந்த இன்னிங்ஸ் அமைந்தது. அவரின் இந்த இன்னிங்ஸ் பல முன்னாள் ஜாம்பவான்களையே ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளது.

அவரின் இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். மேலும் குறைந்த பந்துகளில் ஐபிஎல் சதமடித்த இந்திய வீரர் என்ற யூசுப் பதானின் (38 பந்துகளில்) சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் பிசிசிஐ கவனத்தை ஈர்த்துள்ள சூர்யவன்ஷி விரைவில் இங்கிலாந்து செல்லவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெறவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆயுஷ் மாத்ரேவும் இடம்பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியையாவதுக் கொடுக்குமா தோனி & கோ?.. இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்!