Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

vinoth
செவ்வாய், 20 மே 2025 (13:58 IST)
இந்த சீசனில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என ராஜஸ்தான் அணி 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். சில வாரங்களுக்கு முன்னர் நடந்த  நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்தது.

குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவரது இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.

இவர் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 34 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்தபோது கண்களைத் துடைத்துக் கொண்டே சென்றார் அவர். அதையடுத்து அவர் அழுதுகொண்டு வெளியேறுகிறார் என்று ரசிகர்கள் அவரைத் தேற்றும் விதமாகப் பதிவிட்டனர். அது பற்றி பேசியுள்ள வைபவ் “நான் எங்கே அழுதேன். அங்கிருந்த விளக்குகளின் வெளிச்சத்தால் கண்கள் கூசியது. அதனால் கண்களைத் தேய்த்துக் கொண்டே வெளியேறினேன். ஆனால் எல்லோரும் என்னை ஏன் அழுதேன் எனக் கேட்கிறார்கள்?” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments