Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

Advertiesment
Dhoni

Prasanth Karthick

, செவ்வாய், 20 மே 2025 (09:26 IST)

ஐபிஎல் போட்டிகளில் இன்று CSK - RR அணிகள் மோத உள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளது.

 

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிரடியாக விளையாடிய ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆப் தகுதி பெற்றுவிட்ட நிலையில்,  டெல்லி, மும்பை அணிகள் ப்ளே ஆப்க்காக போராடி வருகின்றன. ஆனால் மற்ற அணிகள் மோசமான தோல்வியால் ப்ளே ஆப் தகுதியிலிருந்து வெளியேறிவிட்டன.

 

அப்படியாக இந்த சீசனில் முதலிலேயே ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், இதுவரை ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக ஃபினிஷ் செய்ததில்லை. ஆனால் இந்த முறை கடைசி இடத்தில் கிடக்கிறது. எப்படியாவது 9 அல்லது 8வது இடத்திற்கு முன்னேறிவிட்டால் அந்த மோசமான சாதனையையாவது தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டும் உள்ளது.

 

இந்நிலையில்தான் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே போட்டிகள் நடைபெற உள்ளது. புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணியும் சிஎஸ்கே போலவே 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில்தான் உள்ளது. இன்று இந்த இரண்டு அணிகளில் எது வெற்றி பெற்றாலும் 9வது இடத்தில் இருக்க முடியும். மோசமன சாதனையை தவிர்க்க சிஎஸ்கே முயலுமா? அல்லது ராஜஸ்தான் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!