Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2022; சிஎஸ்ஜி அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு!

Advertiesment
TNPL
, வியாழன், 9 ஜூன் 2022 (11:01 IST)
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அளவில் நடைபெறும் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 23ம் தேதி முதல் தொடங்கி நெல்லை, சேலம், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.

இதன் முதல் போட்டி 23ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 5 முறை நடந்துள்ள டிஎன்பிஎல் போட்டிகளில் சேப்பாக் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த சீசனில் விளையாட உள்ள சேப்பாக் அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. கேப்டனாக கவுசிக் காந்தி தலைமை தாங்குகிறார்.

வீரர்கள் பட்டியல்: அலெக்சாண்டர், அருண், பரசித் ஆகாஷ், ராதாகிருஷ்ணன், ராகுல், சதிஷ், சித்தார்த், சோனு யாதவ், விஜய் குமார், கார்த்திக், மதன் குமார், சுஜய், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசி தேவ், ஹரிஷ்குமார், அருண்குமார், ஜெகதீசன், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், நிலேஷ் சுப்பிரமணியன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - கேப்டனாக ரிஷப் பண்ட் வெற்றியை சுவைப்பாரா?