Publish Date: Tue, 07 Jun 2022 (17:39 IST)
Updated Date: Tue, 07 Jun 2022 (17:43 IST)
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 15 வது சீசன் சமீபத்தில் நடந்தது. இதில், கடந்த மாதம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.
இந்த நிலையில், இறுதிப் போட்டிக்குப் பிறகு ராயல்ஸ் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் ஜிடி பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியியோர் விருந்திற்குப் பிறகு ஒன்றாய் நேரத்தைச் செலவழித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரு இரவு விருந்திற்குப்பின், வீட்டிற்குக் கிளம்பும்போது, ஒரு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், சாஹல் போதையில் தள்ளாடுவது போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.