TNPL போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த இறுதி போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்க அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 220 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா ஆகியோர் முறையே 65 ரன்கள் மற்றும் 77 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து 221 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிய திண்டுக்கல் அணி 102 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன் துஷேர் ரஹேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.