Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

TNPL 2025: முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய திருப்பூர் தமிழன்ஸ்! - 16 ஓவரில் மண்ணைக் கவ்விய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!

Advertiesment
TNPL 2025

Prasanth K

, புதன், 2 ஜூலை 2025 (09:47 IST)

TNPL போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த ப்ளே ஆப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி.

 

முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உத்திரசாமி சசிதேவ் 26 பந்துகளில் 57 ரன்களை அடித்தார். அதன்பின்னர் 203 ரன் டார்கெட்டில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ஆரம்பம் சிறப்பாக தொடங்கினாலும் 9 வது ஓவர் முதலாக ஓவருக்கு ஒரு விக்கெட் என விக்கெட்டை இழக்கத் தொடங்கியது.

 

16.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சேப்பாக்கம் அணி 123 ரன்களுடன் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக திருப்பூர் அணியை சேர்ந்த எசக்கிமுத்துவும், மதிவாணனும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

 

இதன்மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது திருப்பூர் தமிழன்ஸ்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று வடிவிலானக் கிரிக்கெட்டிலும் அபாயமான வீரர்… பண்ட்டைப் பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்!