Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சச்சின் விக்கெட்டை எடுத்ததால் கொலை மிரட்டலுக்கு ஆளான பவுலர்- 9 ஆண்டுகளுக்குப் பின் பகிர்ந்த ரகசியம்!

சச்சின் விக்கெட்டை எடுத்ததால் கொலை மிரட்டலுக்கு ஆளான பவுலர்- 9 ஆண்டுகளுக்குப் பின் பகிர்ந்த ரகசியம்!
, திங்கள், 8 ஜூன் 2020 (11:10 IST)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான டிம் பிரெஸ்னன் சச்சினின் விக்கெட்டை எடுத்ததால் தனக்குக் கொலை மிரட்டல் வந்ததாகக் கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் 90 ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டு இருந்தார். அந்த போட்டியில் சச்சின் சதம் அடிக்கவேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர்.  ஏனென்றால் அது சச்சின் சர்வதேசப் போட்டிகளில் அடிக்கப்போகும் 100 ஆவது சதம். ஆனால் 91 ரன்கள் எடுத்த போது இங்கிலாந்துன் டிம் பிரெஸ்னன் வீசிய பந்துவீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். அந்த விக்கெட் மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியது.

ஏனென்றால் அந்த பந்து பேட்டில் பட்டு இன்ஸைட் எட்ஜ் ஆனது. அதைக் கவனிக்காமல் நடுவர் ராட் டெக்கர் அவுட் கொடுத்தார். அதனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து 100 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்நிலையில் டிம் பிரெஸ்னன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘அந்த போட்டி முடிந்த பின்னர் எனக்குப் பல கொலை மிரட்டல்கள் வந்தன. எனக்கு மட்டுமில்லாமல் நடுவர் ராட் டக்கருக்கும் அதுபோல கொலை மிரட்டல் வந்தன. அதனால் இருவரும் போலிஸிடம் புகார்கொடுத்து பாதுகாப்பு பெற்றோம்’ எனக் கூறியுள்ளார். இன்றுவரை சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் அடித்த வீரராக சச்சின் மட்டுமே உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 மாதங்களுக்கு பின் நடந்த கால்பந்து போட்டி: ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு