Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 மாதங்களுக்கு பின் நடந்த கால்பந்து போட்டி: ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

Advertiesment
2 மாதங்களுக்கு பின் நடந்த கால்பந்து போட்டி: ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு
, ஞாயிறு, 7 ஜூன் 2020 (08:53 IST)
2 மாதங்களுக்கு பின் நடந்த கால்பந்து போட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகள், உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், ஐதராபாத் பேட்மிண்டன் போட்டிகள், முக்கிய டென்னிஸ் போட்டிகள் என பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன 
 
இந்த நிலையில் வியட்நாமில் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றதால் அதை தான் நேரில் காண்பதற்காக குவிந்த ரசிகர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்ற காரணத்தினால் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக கால்பந்து போட்டி ஒன்று அந்நாட்டில் உள்ள நாம்தின் என்ற நகரில் நடைபெற்றது 
 
இந்த போட்டியை காண ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். ஒவ்வொரு பார்வையாளர்களையும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் அரங்கத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் இருப்பினும் தனிமனித இடைவெளி என்பது கடைப் பிடிக்கவில்லை என்பது சோகமான ஒன்றாகும்
 
இந்த போட்டி ஆரம்பம் முதல் முடியும் வரை பார்வையாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு களித்தனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர் கால்பந்து போட்டியை நேரில் பார்ப்பதால் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அவர்கள் தெரிவித்தனர். வியட்நாம் நாட்டின் கால்பந்து போட்டி நடைபெறும் நடைபெற தொடங்கியதை அடுத்து மற்ற சில நாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
மேலும் வியட்நாம் நாட்டில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 329 பேர் மட்டுமே உள்ளனர் என்பதும் அவர்களில் 307 பேர் குணமாகிவிட்டனர் என்பதும், அந்நாட்டில் கொரோனாவால் பலி எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்கா சர்மா பகிர்ந்த புகைப்படம் …வாவ் சொன்ன விராட் கோலி