Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியாவை இந்தியா பந்தாடும் எனக் கூறியதை கேலி செய்தனர் - பாகிஸ்தான் வீரர்

ஆஸ்திரேலியாவை இந்தியா பந்தாடும் எனக் கூறியதை கேலி செய்தனர் - பாகிஸ்தான் வீரர்
, வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:08 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவைப் பந்தாடும் என நான் கூறிய போது எல்லோரும் என்னைக் கேலி செய்தனர் ஆனா இப்போது நான் கூறியது நடந்துள்ளது எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் ரஹானே தலைமையிலான இந்திய அணி பார்டர் -  கவாஸ்கர் டிராபியை ஜெயிக்கும் என சோயப் அக்தர் கூறியுள்ளார்.

மேலும், அடிலெய்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் அபாரமாக விளையாடி வென்று தற்போது தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

மேலும், நான் இதுகுறித்து ஏற்கனவே என் நண்பர்களிடம், இந்திய அணி ஆஸ்திரேலியாவை பந்தாடும் எனக் கூறினேன் இதைக் கேட்டு அவர்கள் சிரித்தனர்.

ஆனால், முதல் டெஸ்டில் இந்திய அணி 36/9 விக்கெட்டுகள் இழந்து ஆடியது.அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் 369 எனப் படித்தேன். பின்னர் இரண்டாவது டெஸ்டில் மெல்போனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி  வென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து: என்ன காரணம்?