ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட்ட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, சிஎஸ்கே அணிக்கு ஆறுதல் வெற்றி கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 10 ஆவது தோல்வியாகும்.
இதன் மூலம் 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு சீசனில் அதிக தோல்விகளைப் பெற்று சி எஸ் கே அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு 10 தோல்விகளை பெற்றது. இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தோல்விகள் என்ற சாதனையில் 2020 ஆம் ஆண்டு சீசனை முறியடிக்கும்.