Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

vinoth
வெள்ளி, 30 மே 2025 (10:00 IST)
ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. வெறும் 102 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, மிக எளிதில் பஞ்சாப் அணியை வீழ்த்தியவுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பெங்களூர் அணியில் சுயாஷ் ஷர்மா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து பேட் செய்ய வந்த பெங்களூரு அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் ஃபில் சால்ட் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக 10 ஆவது ஓவரின் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்து பெங்களூர் அணி இலக்கை எட்டியது.

சிறப்பாக பந்துவீசிய சுயாஷ் ஷர்மா ஆட்டநாயகன் விருதைப் பெற்றபின்னர் பேசிய சுயாஷ் ஷர்மா “எனக்கு அணியில் பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் கூறிய அறிவுரை என்னவென்றால் ‘நீ கூக்ளி மற்றும் லெக் ஸ்பின் என எந்த பந்து வீசினாலும் அதை ஸ்டம்ப்புக்கு நேராக வீசு’ எனக் கூறினர். இன்றைய ஆட்டநாயகன் விருதை நான் கொண்டாடப் போவதில்லை. ஜூன் 3 ஆம் தேதி கோப்பையை வென்ற பிறகு மொத்தமாக சேர்த்துக் கொண்டாடலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments