Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

Prasanth Karthick
வெள்ளி, 30 மே 2025 (09:54 IST)

நேற்றைய ஐபிஎல் குவாலிபயர் போட்டியில் பஞ்சாபை வீழ்த்திய பின்னான கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.

 

கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தபோதும், இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணியாக இருந்து வருகிறது ஆர்சிபி. ஆனாலும் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் ஆர்சிபிக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்றால் அதற்கு காரணம் விராட் கோலிதான். அவருக்காக இந்த முறையாவது ஆர்சிபி கப் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

இந்த முறை செம ஃபார்மில் இருக்கும் ஆர்சிபி நேற்றைய குவாலிபயர் போட்டியில் பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. அந்த ஒரு போட்டியை வென்று விட்டால் போதும். ஆர்சிபியின் 18 வருட கோப்பைக் கனவு நனவாகிவிடும். இதற்காகதான் கோலியும், அவரது ரசிகர்களும் பல ஆண்டுகள் தவமாக காத்திருக்கிறார்கள்.

 

 

நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு உற்சாகத்தில் துள்ளிக் குதித்த விராட் கோலி தன் சக வீரர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து “One More to go” (இன்னும் ஒரு ஆட்டம்தான்) என்று காதில் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments