நேற்றைய DC vs RR போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி அபார வெற்றி பெற்ற நிலையில், அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஹெட்மயரும் ஒரு காரணம் என சொன்னால் மிகையாகாது.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதிக் கொண்ட நிலையில் டெல்லி அணி 188 ரன்களை ஸ்கோர் செய்ய, சேஸிங் வந்த ராஜஸ்தான் அணியும் டெல்லியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடித்து 188ஐ வந்தடைய மேட்ச் சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது.
சூப்பர் ஓவரில் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் இறங்கிய நிலையில், ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெட்ஸ்வால்தான் பேட்டிங் வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் டெல்லி வழக்கம்போல ஸ்டார்க்கைதான் பந்துவீச தயார் செய்திருந்தது. நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் ஸ்டார்க் பந்தையே ஜெய்ஸ்வால் பவுன்டரிக்கு தள்ளியது மட்டுமல்லாமல், 51 ரன்கள் அடித்திருந்தார்.
ஆனால் ஜெய்ஸ்வாலை இறக்காமல் ரியான் பராக்கையும், ஷிம்ரன் ஹெட்மயரையும் ஏன் ராஜஸ்தான் இறக்கியது என்பது கேள்விக்குறியே! கடைசி ஓவரில் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஏற்கனவே ஹெட்மயர் திணறிக் கொண்டுதான் இருந்தார். சூப்பர் ஓவரில் 4 பந்துகளை எதிர்கொண்டதில் 1 பவுண்டரி அடித்தார் ஹெட்மயர். ரியான் பராக் 2 பந்துகளில் ஒன்றை பவுண்டரி அடித்தார். ஆனால் அதற்கடுத்த பந்தை பராக் மிஸ் செய்த நிலையில் பின்னால் கே.எல்.ராகுல் பந்தை பிடித்திருந்தார். அதனால் பராக் பேட்டிங் லைனை தாண்டவில்லை.
ஆனால் அதற்கு பவுலிங் லைனிலிருந்து ஹெட்மயர் வேகமாக ஓடிவந்ததால் அவசரத்தில் ரியான் பராக்கும் ஓட ஈஸியாக ஸ்டம்பிங் ஆனார். ஹெட்மயரின் அவசரக்குடுக்கைத்தனம் அத்தோடு முடியவில்லை. அடுத்து வந்த ஜெய்ஸ்வாலையும் அவசரமாக இரண்டு ரன்கள் ஓட முயற்சித்து ரன் அவுட் செய்தார். ஜெய்ஸ்வால் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் தோற்று வெளியேறினார். 2 விக்கெட்டுகள்தான் சூப்பர் ஓவரில் அதிகபட்சம் என்பதால் வெறும் 5 பந்துகளில், ஒரு ஓவர் முடிவதற்குள்ளாக 12 ரன்களில் ராஜஸ்தான் வெளியேறியது.
அதன் பின்னர் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸின் கே எல் ராகுல், ஸ்டப்ஸ் சிறப்பாக விளையாடி 4 பந்துகளிலேயே 13 ரன்களை குவித்து ஆட்டத்தை முடித்தனர்.
Edit by Prasanth.K