ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

vinoth
திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (07:56 IST)
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலைஒயில் இந்த தொடருக்கான அணியில் இந்திய டி 20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெற மாட்டார் என தெரிகிறது. ஏனென்றால் அவர் சமீபத்தில் ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’வுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அதற்கான ஓய்வில் இப்போது இருக்கிறார். இதன் காரணமாக அவருக்குப் பதில் அணியை வேறு யாரேனும் வழிநடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments