ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் தொடங்கி மிகச்சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சன் ரைஸர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அதிரடிக்குப் பெயர் போன SRH அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. குஜராத் அணியில் சிறப்பாகப் பந்துவீசி முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
சன் ரைசர்ஸ் அணி அதிரடியான பேட்டிங் மூலமாக 250 ரன்கள் இலக்கை வெகு சாதாரணமாக நிர்னயித்து வந்தது. ஆனால் இந்த சீசனில் அந்த அணியின் காட்டடி அணுகுமுறை அணிக்குக் கைகொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் தொடர்ந்து நான்கு போட்டிகளைத் தோற்று அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.