Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

Advertiesment
தோனி

vinoth

, புதன், 21 மே 2025 (15:18 IST)
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார்.

தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறார். இந்த ஆண்டு அவர் தலைமையேற்கும் சி எஸ் கே அணி மிகமோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த முறை ருத்துராஜ் கேப்டனாக செயல்பட்ட நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டதால் அவருக்குப் பதில் தோனி தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இந்த சீசனில் எப்படியும் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லாது என்பது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி இடமாவது பிடிக்காமல் கௌரவமாக செல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதன் மூலம் அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது.

இந்நிலையில் சென்னை அணியின் ரசிகரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் சென்னை அணியின் கேப்டன் தோனியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் “சென்னை அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் சரியில்லை. தோனியால் சுழல்பந்தை விளையாட முடியவில்லை. அவர் வந்தாலே சுழலர்கள் அவரைக் கட்டிப் போட்டு விடுகின்றனர். வயது மூப்பால் அவரால் தேவையான உடல்தகுதியைப் பெற முடியவில்லை. தோனி ‘என்னால் விளையாட முடியவில்லை’ என்று சொல்லிவிட்டு விலகவேண்டும். ஆனால் அதை அவர்தான் சொல்லவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!