இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார்.
தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறார். இந்த ஆண்டு அவர் தலைமையேற்கும் சி எஸ் கே அணி மிகமோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த முறை ருத்துராஜ் கேப்டனாக செயல்பட்ட நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டதால் அவருக்குப் பதில் தோனி தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இந்த சீசனில் எப்படியும் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லாது என்பது உறுதியாகியுள்ள நிலையில் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் சி எஸ் கே அணி நிர்வாகத்திடம் ஓய்வு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த சீசனில் அவர் விளையாடுவார் என்று நம்பலாம்.