Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலிங்காவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மற்றொரு இலங்கை வீரர்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (13:00 IST)
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு அறிவித்ததையடுத்து மற்றொரு இலங்கை வேகப்பந்து வீச்சாளரும் ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இலங்கை அணியின் மூத்த வீரரும், வேகபந்து வீச்சாளருமான லசித் மலிங்கா தற்போது நடைபெறும் வங்க தேச சுற்று பயண ஆட்டம் முடிந்ததும் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தகுதி வாய்ந்த வீரர்கள் இலங்கை அணியில் இல்லாத நிலையில் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் இலங்கையின் மற்றுமொரு மூத்த வீரரான நுவன் குலசேகரா தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார். 2014ல் டி20 கோப்பையை வென்ற இலங்கை அணியில் குலசேகராவும் இருந்தார். 2017க்கு பிறகு அவருக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே இலங்கை அணி புதிய வீரர்களால் தடுமாறி வரும் நிலையில் குலசேகராவின் ஓய்வு அறிவிப்பு மற்றுமொரு அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments