நான் கிரிக்கெட் வீரன் இல்லை, ராணுவ வீரன் – வைரலான தோனியின் ராணுவ வீடியோ

திங்கள், 22 ஜூலை 2019 (12:54 IST)
வெஸ்ட் இண்டீசுடனான சுற்று பயன ஆட்டத்தை தவிர்த்து விட்டு இராணுவ வீரர்களோடு பயிற்சியில் தோனி ஈடுபட்டுள்ளார். இராணுவ உடுப்பில் அவர் காரிலிருந்து இறங்கி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த உலக கோப்பையில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்தே தோனியின் மீது விமர்சங்கள் அதிகமாக எழத் தொடங்கின. யுவராஜ் சிங்கின் அப்பா யோகராஜ் சிங் முதற்கொண்டு பலர் தோனி மீது குற்றம் சாட்டினார்கள். மேலும் தோனி உலக கோப்பையில் மோசமாக விளையாடியதால் வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயண ஆட்டத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சர்ச்சை எழுந்தது.

வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்திற்கு தான் செல்லவில்லை என்று தானாகவே கடிதம் எழுதி கொடுத்த தோனி இராணுவ பயிற்சிக்கு செல்ல போவதாக அறிவித்தார். தோனி இராணுவத்தில் கௌரவ லெப்டிணெண்ட் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இராணுவ பயிற்சிக்காக தோனி சென்றுள்ளார். இராணுவ முகாமில் இராணுவ உடுப்பில் கம்பீரமாக காரிலிருந்து அவர் இறங்கி வரும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Proud moment for his fan

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 6 ரன் கொடுத்தது தவறுதான்… ஆனால் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் – நடுவர் தர்மசேனா பேட்டி !