Publish Date: Wed, 13 Jul 2022 (09:44 IST)
Updated Date: Wed, 13 Jul 2022 (09:46 IST)
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அந்த தொடரை கைவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவோடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கான தேதிகளை மாற்றும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் மாற்றுத்தேதிகள் ஒதுக்க முடியாத சூழலால் அதை மறுத்தது ஆஸி. கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில் இப்போது மொத்த தொடரையும் கைவிட்டுள்ளது தென் ஆப்பிரிக்கா. இதனால் மூன்று ஒருநாள் போட்டிகளின் மூலம் கிடைக்கும் புள்ளிகளை இழப்பதால், 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு நேரடி தகுதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.