ஆஸ்திரேலியாவில் தாக்க வந்த முதலை ஒன்றை முதியவர் சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டிய சம்பவம் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள டார்வின் பகுதியில் ஒரு கேளிக்கை விடுதியை நடத்தி வரும் முதியவர் கை ஹென்சன் (kai Hansen). இவர் சமீபத்தில் தன் கேளிக்கை விடுதி அருகே உள்ள நீர்நிலைக்கு பக்கத்தில் உள்ள புல்பரப்பில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
அப்போது அந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று அவரது உணவகம் அருகே வந்து படுத்து கிடந்துள்ளது. ஆனால் அதை கண்டு துளியும் பயப்படாத ஹென்சன் தன் கையிலிருந்த வாணலியை எடுத்து சென்று முதலை முகத்தில் அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான முதலை எதிர் திசையில் தப்பி ஓடியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.