Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

vinoth
சனி, 5 ஜூலை 2025 (08:01 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லின் அபாரமான இரட்டை சதத்தால் 587 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி 84 ரன்களுக்கே ஐந்து விக்கெட்களை இழந்துவிட்ட போதும் ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் மீண்டெழுந்தது. ஹாரி ப்ரூக் 158 ரன்களும், ஜேமி ஸ்மித் 184 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பாக சிறப்பாக வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலை பெற்றது. பாலோ ஆன் தவிர்க்கப்பட்டதால் இந்திய அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 64 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. களத்தில் கே எல் ராகுல் மற்றும் கருண் நாயர் ஆகியோர் உள்ளனர். இந்தியா தற்போது 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments