Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

Advertiesment
இந்தியா

Mahendran

, வெள்ளி, 4 ஜூலை 2025 (17:09 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அபாரமாக விளையாடி 587 ரன்கள் குவித்தது. குறிப்பாக, கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தவிர, ஜடேஜா 89 ரன்களும், ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர்.
 
இதனை அடுத்து, இங்கிலாந்து அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் நிலையில், 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. 
இருப்பினும், ஸ்மித்   மற்றும் புரூக் அபாரமாக விளையாடி வருகின்றனர். ஸ்மித் 84 ரன்களுடனும், புரூக் 71 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
 
இங்கிலாந்து அணி தற்போது 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 377 ரன்கள் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?