Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

Mahendran
வெள்ளி, 4 ஜூலை 2025 (17:49 IST)
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவி வரும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என்றும், பாகிஸ்தான் அணிக்கும் இந்தியாவுக்கு வர அனுமதி இல்லை என்றும் இந்திய அரசு முடிவு எடுத்திருந்தது. 
 
இதனால், நடுநிலை நாடுகளில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக வங்கதேசத்திலும் இனி எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆகஸ்ட் 17 முதல் 31 வரை ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்த நிலையில், இந்த தொடர் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சி, தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வன்முறை, இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் ஆகிய காரணங்களால் இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பி.சி.சி.ஐ. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
 
ஆனால், அதே நேரத்தில், இந்தத் தொடர் ரத்து செய்யப்படவில்லை என்றும், 'ஒத்திவைப்பு' என்று மட்டுமே முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த தொடரின் ஊடக உரிமை மற்றும் டிக்கெட் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments