இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி வந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ்-24, ஷாய் ஹோப்-36, ஜஸ்டின் க்ரீவ்ஸ்-32 ஆகியோர் மட்டுமே சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணி சார்பாக சிராஜ் 4 விக்கெட்களும், பும்ரா 3 விக்கெட்களும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.