இந்திய அணி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆசியக் கோப்பையை வென்றதையடுத்து மூன்றே நாட்கள் இடைவெளியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஆனால் ஆசியக் கோப்பைத் தொடரில் இடம்பெற்ற ஒரு சில வீரர்களே இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
அகமதாபாத்தில் நடக்கவுள்ள போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் வீசப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்: டாக்நரேன் சந்தர்பால், ஜான் கேம்ப்பல், அலிக் அத்னான்ஸே, பிராண்டன் கிங். ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டீன் க்ரீவ்ஸ், ஜோமல் வேரிக்கன், கேரி பியர்ஸ், ஜோனஹன் லாய்னே, ஜேய்டன் சீல்ஸ்
இந்திய அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில், துருவ் ஜுரெல், ரவீந்தர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.