Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

vinoth
திங்கள், 7 ஏப்ரல் 2025 (08:54 IST)
ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் தொடங்கி மிகச்சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சன் ரைஸர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அதிரடிக்குப் பெயர் போன SRH அணியை குஜராத் அணி பவுலர்கள் 152 ரன்களில் சுருட்டினர். அதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. குஜராத் அணியில் சிறப்பாகப் பந்துவீசி முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணிக் கேப்டன் ஷுப்மன் கில் “உண்மையில் டி 20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களே ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள். ஆனால் டி 20 என்றாலே பலரும் அதிரடியான ஷாட்களை விளையாடும் பேட்ஸ்மேன்கள் பற்றிதான் பேசுகிறார்கள்.  ஆனால் உண்மையில் பவுலர்களே அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தரக் கூடியவர்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் தேர்வாகவில்லை: அஜித் அகர்கர் விளக்கம்..!

கேப்டனாக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்! ஆசியக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு!

அவருக்கு மாற்றே இல்லை… ரோஹித் ஷர்மாவைப் புகழ்ந்த முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments