ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

vinoth
வியாழன், 3 ஏப்ரல் 2025 (06:40 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்னும் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவரை 18 சீசன்கள் நடந்துள்ள நிலையில் அந்த அணிக்கு 17 பேர் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். தற்போது 17 ஆவது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அதை இப்போது ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து வருகிறார். அவர் தலைமையில் பஞ்சாப் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தொடர்ந்து கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்குத் தலைமை தாங்கிய அவர் அதில் 6 போட்டிகளைத் தொடர்ந்து வென்றார், தற்போது பஞ்சாப் அணிக்காக இரண்டு போட்டிகளை வென்றுள்ள நிலையில் மொத்தம் 8 விக்கெட்களை தொடர்ந்து வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்று கம்பீர் முதல் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments