Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

Advertiesment
மும்பை இந்தியன்ஸ்

vinoth

, செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (12:51 IST)
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்று கலக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக விளையாடி வருகின்றது. அந்த அணியில் இருந்து சில வீரர்கள் வெளியேறியது, கேப்டன்சி மாற்றத்தால் ஏற்பட்ட குளறுபடி என தடுமாறி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சீசனில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று புள்ளிப் பட்டியலில் பின் வரிசையில் இருந்த மும்பை இந்தியன்ஸ், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த போட்டியில் அறிமுகப் பவுலர் அஸ்வனி குமாரின் அபாரமாக பந்துவீசி 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அஸ்வனி குமார் குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “எங்கள் அணி நிர்வாகம் நாடு முழுவதும் சுற்றி இளம் திறமையாளர்களைத் தேடி கண்டுபிடித்துள்ளது. அது பெருமிதமான ஒன்று” எனக் கூறியுள்ளார். பாண்ட்யா சகோதரர்கள், ஜாஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்டவர்களை மும்பை இந்தியன்ஸ் அணிதான் கிரிக்கெட் உலகுக்கு அழைத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!