Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து சீனியர் வீரர்கள் புகார்?... பரபரப்பு தகவல்!

vinoth
வியாழன், 9 மே 2024 (15:22 IST)
இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பினாலும் அனைவராலும் பேசப்படும் ஒரு பெயராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அதனால் அவர் டாஸ் போட செல்லும்போதும், களமிறங்கும் போது அவரை தாக்கி கடுமையாக ஏளனம் செய்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நேற்றைய சி எஸ் கே அணிக்கு எதிரான போட்டியிலும் இது தொடர்ந்தது. அதற்கேற்றார் போல ஹர்திக் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார். இந்நிலையில் விளையாடிய 11 போட்டிகளில் 3 ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் மும்பை அணியின் இத்தகைய தோல்விக்கு ஹர்திக்கின் கேப்டன்சிதான் காரணம் என மூத்த வீரர்களான பும்ரா, சூர்யகுமார் உள்ளிட்டவர்கள் அணிப் பயிற்சியாளர்களிடம் புகார் கூறியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அதை பயிற்சியாளர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. எப்போதும் நடக்கும் கேப்டன்சி மாற்றம் நடக்கும்போது ஏற்படும் அதிருப்திதான் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments