ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 48 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
இந்நிலையில் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கிறது.
அதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெல்ல டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.