Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

vinoth
வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:59 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 32 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 188 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 188 ரன்கள் சேர்க்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது.  கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்களேத் தேவைப்பட சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சூப்பர் ஓவரிலும் ஸ்டார்க்கே டெல்லி அணிக்காக பந்துவீச அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 4 பந்துகளில் இலக்கை எட்டியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருக்கும் போது அவரை பந்து வீச வைக்காமல் சந்தீப் ஷர்மாவை நம்பி கொடுத்தார் கேப்டன் சஞ்சு சாம்சன். ஆர்ச்சரை ஒப்பிடும் போது சந்தீப் மிகவும் மெதுவான பந்துவீச்சாளர். அதனால்தான் டெல்லி பேட்ஸ்மேன்கள் அவரை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெற்றனர் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments