Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராட் கோலியை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

koli
, புதன், 15 நவம்பர் 2023 (19:32 IST)
இன்று இந்தியா-  நியூசிலாந்து  அணிகள் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்துள்ளார். இது அவரது ஐம்பதாவது சதமாகும்.

இதுவரை அதிகமாக சச்சின் டெண்டுல்கர் 49 சதமடித்துள்ள நிலையில் அவரது சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். இந்த போட்டியை சச்சின் டெண்டுல்கர் நேரில் பார்க்க மைதானத்திற்கு வந்த நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த விராட் கோஹ்லிக்கு எழுந்து நின்று அவர் கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ’’டிரெஸ்ஸிங் ரூமில் உங்களை முதன்முதலில் சந்தித்தபொஅது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தனர். அப்போது என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அதன்பின் விரைவில் உங்கள் ஆர்வம் மற்றும் திறமையால் என் இதயத்தைத் தொட்டீர்கள்.  அந்தச் சிறுவன் விராட் வீரராக வளர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு இந்திய வீரர் என் சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய வேறு எதுவும் இல்லை.  இந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி என்ற பெரிய அரங்கில் எனது சாதனையை  சொந்த அரங்கில் நிகழ்த்தியுள்ளது அழகு சேர்ப்பதாக’’ உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 14.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள்  எடுத்து விளையாடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை அரையிறுதி: 400 ஐ நெருங்கிய இலக்கு.. சமாளிக்குமா நியூசிலாந்து..