இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 9 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இன்று மதியம் நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்து அணியை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “இந்திய அணி இன்றைய போட்டியில் டாஸ் வென்றால் கண்டிப்பாக பேட்டிங்கை தேர்வு செய்யவேண்டும். ஏனென்றால் இந்திய அணியின் பவுலிங் யூனிட் முதல் இன்னிங்ஸ் அல்லது இரண்டாவது இன்னிங்ஸ் என எதிலும் சிறப்பாக பந்துவீசும் அளவுக்கு வலுவாக உள்ளது.
இந்திய அணி முதலில் பேட் செய்து எவ்வளவு அதிக ரன்கள் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்க வேண்டும். அதற்கான 400 ரன்கள் இலக்கு எல்லாம் தேவையில்லை. 270 ரன்கள் சேர்த்தால் கூட அது நியுசிலாந்து அணிக்கு பெரிய இலக்காக அமையும். ரோஹித் ஷர்மா இந்த தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடியது போலவே விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.