இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 9 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் நாளை நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்து அணியை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது.
கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி அரையிறுதி போட்டிகளோடு தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் இந்த முறை கண்டிப்பாக அந்த சோகம் தொடராது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் நாளை நடக்கவுள்ள போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் “இந்திய அனி நியுசிலாந்தை வெற்றி பெறவேண்டும் என்றால் ரோஹித் ஷர்மா தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நியுசிலாந்து அணிக்கும் அவரது விக்கெட்தான் முக்கியமானதாக இருக்கும். அவருக்கு மட்டும் ஆட்டம் பிடிபட்டுவிட்டால் கண்டிப்பாக இந்திய அணிதான் வெற்றி பெற்மும்” எனக் கூறியுள்ளார்.