ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 22 வயது வீரரான ரியான் பராக் தனது திறமையான அல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்தார். அவர் 577 ரன்கள் சேர்த்துள்ளார். இதனால் அவர் மேல் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.
ஆனால் இவர் பேசும் பேச்சுகள் இவரை சுற்றி சர்ச்சை எழுமாறு அமைகின்றன. கடந்த மாதம் நான் உலகக் கோப்பை தொடரைப் பார்க்க மாட்டேன் என அவர் சொன்னது சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இப்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களத்தில் மிகவும் அமைதியாக இருப்பார் என்பதைக் கூறியிருந்தார்.
ஆனால் அத்தோடு நில்லாமல் “சில கேப்டன்கள் களத்தில் எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். அவர்களின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்” எனக் கூறிவிட்டார். இதையடுத்து அவர் ரோஹித் ஷர்மாவைதான் அப்படிக் கூறியுள்ளார் என சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. ஏனென்றால் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா சில தருணங்களில் தன்னையறிமால ஆவேசமாகக் கத்தி கோபமாகக் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.