Publish Date: Wed, 03 Jul 2024 (06:51 IST)
Updated Date: Wed, 03 Jul 2024 (06:52 IST)
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான்.
அந்த தொடர் வெஸ்ட் இண்டீஸில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடரில் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டு இந்திய அணியைக் கோப்பை வெல்ல வைத்துள்ளார். இண்ட கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் விடைபெற்றுள்ளார்.
இந்நிலையில் வீரர்கள் அறையில் விடைபெறும் போது நெகிழ்ச்சியாக பேசிய அவர் “நான் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் விடைபெற வேண்டும் என நினைத்தேன். ஆனால் ரோஹித் ஷர்மாதான் எனக்கு அழைத்துப் பேசி எனது பதவிக் காலத்தை நீட்டிக்க சொன்னார். அவரின் அந்த அழைப்பால்தான் என் முடிவை மாற்றிக் கொண்டேன்.” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.