இன்றைய பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த நிலையில் 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெற்றி பெற 11 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் முகமது ஷமி கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்த ஓவரில் மூன்றாவது பந்தை அஷடன் அகார் தூக்கி அடிக்க அது சிக்ஸ் லைனை நோக்கி சென்றது. அப்போது அங்கு பில்டிங்கில் இருந்த கோலி, சூப்பர் மேன் போல தாவி ஒற்றைக் கையால் பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.