Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த போட்டியில் வெற்றிபெற தகுதியே இல்லாத அணியாக இருந்தோம்… தோல்வி குறித்து ரோஹித் ஷர்மா!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:22 IST)
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 2வது நாள் முடிவில் விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 185 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்க அணி. பின்னர் ஆடிய இந்திய அணி 131 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் தகுதியே ஒரு அணியாக நாங்கள் பெறவில்லை. பேட்டிங்கில் கே எல் ராகுல் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பவுலர்கள் மைதானத்தை சரியாக பயன்படுத்தவில்லை.  ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல நீங்கள் ஒரு அணியாக இணைந்து வெல்ல வேண்டும். இந்த மைதானம் பவுண்டரி அடித்து விளையாடக் கூடியதாக இருந்தது. அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை பார்த்தாலே தெரியும். இன்னிங்ஸ்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் தோல்வி அடைந்தோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ரோஹித்? அவரே அளித்த பதில்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments