Publish Date: Thu, 28 Dec 2023 (15:24 IST)
Updated Date: Thu, 28 Dec 2023 (15:29 IST)
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில் ஒரு நாள் தொடரை 21 எனக் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.
59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆ முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அப்போது ராகுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், நேற்று 2 வது நாள் ஆட்டம் ஆரம்பமானது. ராகுல் சதம் அடித்து அசத்த்னார். எனவே இந்திய அணி 67.4 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 2வது நாள் முடிவில் விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில், தனது பேட்டிங் பற்றி கே.எல்.ராகுல் கூறியதாவது: சமூக வலைதளங்களில் இன்று என்னை பாராட்டும் ர்அசிகர்கள், சில மாதங்களுக்கு முன்பாக மோசமாக திட்டியதாக ராகுல் தன் ஆதங்கத்தை கூறியுள்ளார். ஆனால், தான் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் வேலையில் கவலம் செலுத்தி பேட்டால் பதிலடி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.