Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் போட்டிக்கு நடுவே ஓரமாக ஒதுங்கி ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி… கேமரா மேன் செய்த குறும்பு!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:05 IST)
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இப்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 318 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸின் போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று மைதானத்தில் நடந்தது. மைதானத்தில் இந்த போட்டியைக் காண பெரியளவில் கூட்டம் இல்லை. அப்போது காதல் ஜோடி ஒன்று ஆளில்லாத ஒரு இடத்துக்கு சென்று ஜாலியாக ரொமான்ஸ் செய்துகொண்டிருந்தனர்.

அதைக் கண்ட குறும்புக்கார கேமராமேன்  அவர்களை படம்பிடித்து அதை மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் ஒளிபரப்பிவிட்டார். அதைப் பார்த்து மைதானத்தில் இருந்த கூட்டம் ஓவெனக் கத்த அந்த காதல் ஜோடி பதறிப் போய் எழுந்து முகத்தை மறைத்துக்கொண்டு ஒடினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட வாருங்கள்.. அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு..!

இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!

மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments