Publish Date: Tue, 25 Jun 2024 (08:19 IST)
Updated Date: Tue, 25 Jun 2024 (08:21 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முக்கிய போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஜூன் 27 ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி 205 ரன்கள் சேர்க்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 180 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 41 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 8 சிக்ஸர்களை விளாசினார்.
அதிரடியாக ஆடிவந்த அவர் 90 ரன்களுக்குப் பிறகு கொஞ்சம் நிதானமாக ஆடி சதத்தைப் பூர்த்தி செய்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்தனர். இது குறித்து ஆட்டநாயகன் விருது வாங்கும் போது பேசிய ரோஹித் ஷர்மா “நான் அதே டெம்போவில் ஆடி அதிக ரன்களை சேர்க்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அந்த நேரத்தில் சதத்தைப் பற்றியெல்லாம் நான் நினைக்கவில்லை.” எனப் பதிலளித்துள்ளார்.