Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.. செமி பைனலில் மோதுவது யாருடன்?

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.. செமி பைனலில் மோதுவது யாருடன்?

Siva

, செவ்வாய், 25 ஜூன் 2024 (07:20 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முக்கிய போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா அபாரமாக பேட்டிங் செய்து 92 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா நிலையில் டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினாலும் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி காரணமாக இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பதும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்ற நிலையில் அந்த அணியுடன் மோதும் அணி எது என்பது இன்று தெரியவரும், ஜூன் 27 ஆம் தேதி  இரண்டு அரையிறுதி  போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் 29ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!