உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முக்கிய போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஜூன் 27 ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி 205 ரன்கள் சேர்க்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 180 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 41 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 8 சிக்ஸர்களை விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பாபர் அசாமின் சாதனையையும் முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.