டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

vinoth
திங்கள், 23 ஜூன் 2025 (09:08 IST)
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ரோஹித் ஷர்மா. அவர் தலைமையில் இந்திய அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதுபோல ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை தன் தலைமையில் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அதே போல இந்திய அணிக்குத் தலைமை தாங்கி டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட பட்டங்களையும் வென்று கொடுத்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர் தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஞாபக மறதி சொதப்பல் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் போது டாஸ் வென்றால் பந்துவீசவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் டாஸ் வென்றுவிட்டு நான் பேட் செய்ய போவதாக அறிவித்து விட்டேன். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே என்னிடம் ‘ஏன் இப்படி செய்தீர்கள்?’ எனக் கேட்டார்.

பிட்ச் நன்றாக உள்ளது. அதனால்தான் பேட்டிங் எடுத்தேன் எனக் கூறி சமாளித்தேன். நல்ல வேளையாக அன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments