Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

vinoth
சனி, 7 ஜூன் 2025 (08:44 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்ததே அதற்கு சாட்சி.

அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார். இந்நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இம்மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த முடிவை ரோஹித் அறிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த நேர்காணல் ஒன்றில் ‘என் அப்பா டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகர். அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் அந்தளவுக்குப் பிடிக்காது. நான் ஒரு நாள் போட்டிகளீல் 264 ரன்கள் சேர்த்தபோது ‘நன்றாக விளையாடினாய்’ என்று பெரிதும் ஆர்வம் இல்லாமல்தான் சொன்னார். ஆனால் நான் டெஸ்ட்டில் 40, 50 ரன்கள் அடித்தாலே என்னைப் பாராட்டுவார். நான் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டது அவருக்கு வருத்தம்தான்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments