உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ள ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

vinoth
புதன், 12 நவம்பர் 2025 (15:45 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

ஆனால் அவரை ஓய்வு பெற சொல்லி பிசிசிஐ தரப்பு அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.  இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். இதனால் அவர் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவார் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்நிலையி 50 ஓவர் போட்டிகளில் பயிற்சிப் பெறுவதற்காக டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள விஜய் ஹசாரேக் கோப்பை தொடரில் மும்பை அணிக்காக அவர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு வெறும் 20 ஒருநாள் போட்டிகள்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த ரஷித் கான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!

சஞ்சு சாம்சன் - ஜடேஜா மாற்றம் நடந்தால், சிஎஸ்கே இந்த வீரரை வாங்க வேண்டும்: அஷ்வின் கொடுத்த ஐடியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்… ஸ்ரேயாஸ் ஐயர் சந்தேகம்!

ஜடேஜா- சாம்சன் டிரேட் முடிவதில் தாமதம்… ராஜஸ்தான் அணிக்கு எழுந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments